செய்திகள் உண்மை உடனுக்குடன்

ஓபிஎஸ் அணியின் வேட்பாளராகிறார் மதுசூதனன்?

Ops

ஆர்.கே.நகர் தொகுதியில் ஓபிஎஸ் அணியினர் சார்பில் மதுசூதனன் வேட்பாளராக களமிறக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 12-ஆம் தேதி நடைபெறுகிறது. பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான தங்களது வேட்பாளர்களை அதிமுக, திமுக, தேமுதிக ஆகிய கட்சிகள் ஏற்கனவே அறிவித்துவிட்டன. ஆனால் ஓ.பன்னீர்செல்வம் அணி இதுவரை தங்களது வேட்பாளர் பெயரை அறிவிக்கவில்லை.

இதனிடையே, ஓ.பன்னீர்செல்வம் அணியின் ஆட்சி மன்றக்குழு கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் ஓ.பி.எஸ். அணியின் வேட்பாளராக மதுசூதனன் தேர்வு செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.