ஆர்.கே.நகரில் மதுசூதனனைக் களமிறக்கிய ஓபிஎஸ் அணி

ஆர்.கே.நகரில் ஓ.பன்னீர்செல்வம் அணி தரப்பில் மதுசூதனன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஜெயலலிதா மறைவால் காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் ஏப்ரல் 12ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிடுவார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக சார்பில் மருது கணேஷ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தேமுதிக சார்பில் மதிவாணன் போட்டியிடுகிறார். இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் அணி தரப்பில் அவைத்தலைவர் மதுசூதனன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.