சுஷ்மா சுவராஜை சந்திக்கிறார் ஜெயக்குமார்

மீனவர்கள் பிரச்னை குறித்து பேசுவதற்காக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை, தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று சந்திக்கிறார்.

இதற்காக டெல்லி சென்றுள்ள அமைச்சர் ஜெயக்குமார், மீனவர்கள் விவகாரம் தொடர்பாக, இருநாட்டு மீனவ பிரதிநிதிகள் இடையே நடைபெற இருக்கும் பேச்சுவார்த்தை, தமிழக மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் உள்ளிட்டவை குறித்து இந்தச் சந்திப்பின்போது சுஷ்‌மா சுவராஜூடன் ஆலோசிப்பார் எனத் தெரிகிறது.

மாலை மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லியையும் அமைச்சர் ஜெயக்குமார் சந்தித்து பேசுகிறார். இதேபோல், மத்திய மின்துறை அமைச்சர் பியூஷ் கோயலை, தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி, நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்துப் பேசுகிறார்.