செய்திகள் உண்மை உடனுக்குடன்

ஆர்.கே.நகரில் 256 வாக்குச்சாவடிகள்: ராஜேஷ் லக்கானி தகவல்

சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மொத்தம் 256 வாக்குச்சாவடிகள் பயன்படுத்த இருப்பதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி, ராஜேஷ் லக்கானி கூறினார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அடுத்த மாதம் 12-ம் தேதி நடக்கிறது. இதில் அதிமுக சார்பில் டிடிவி தினகரன், ஓபிஎஸ் அணி சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருதகணேஷ், எம்.ஜி.ஆர் -அம்மா பேரவை சார்பில் தீபா உட்பட பலர் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, ’ஆர்.கே.நகரில் மொத்தம் 2.62 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்கள் 1,28,305 பேர், பெண் வாக்காளர்கள் 1,34,307 பேர். இங்கு மொத்தம் 256 வாக்குச்சாவடிகளில் 1024 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. 1,842 ஊழியர்கள் பணியில் ஈடுபடுகின்றனர். வரும் 23-ம் தேதி இறுதிகட்ட வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்’ என்றார்.