கடையை உடைத்து மது அருந்திவிட்டு அங்கேயே படுத்த நபர்

கரூர் அருகே அரசு மதுபானக் கடையின் மேற்கூறையை உடைத்து உள்ளே சென்று மது குடித்து விட்டு அங்கேயே போதையில் உறங்கினார் ஒருவர்.

தண்ணீர்பந்தல் பகுதியில் உள்ளே நேற்றிரவு பூட்டப்பட்டிருந்த மதுபான கடையின் மேற்கூறையை உடைத்து சரவண பாண்டியன் என்பவர் விலை உயர்ந்த 10க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை எடுத்து வந்து கடையின் அருகில் மது அருந்தி விட்டு அங்கேயே தூங்கிவிட்டார். இன்று காலை கடைக்கு வந்த ஊழியர்கள் மதுபானக்கடையைத் திறந்து பார்த்தபோது, மதுபாட்டில்கள் சிதறி கிடந்தை கண்டு காவல்துறையில் புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சரவணபாண்டியனைக் கைது செய்து அழைத்து சென்றனர்.