மாறுபட்ட கருத்தால் தாமதம்: திருமாவளவன்

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவது குறித்து நாளை மாலைக்குள் முடிவு அறிவிக்கப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளரை சந்தித்த அவர், மக்கள் நலக் கூட்டியக்கத்தின் ஒற்றுமையை அடிப்படையாக வைத்து ஒருமித்த முடிவு எடுக்கப்பட உள்ளதாக கூறினார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி போட்டியிடுவதில் உறுதியாக இருப்பதாகவும் இதில் மக்கள் நலக் கூட்டியகத்தில் உள்ள மற்ற கட்சிகளின் மாறுபட்ட கருத்தே தாமதத்துக்கு காரணம் என தெரிவித்தார். ஆர்.கே.நகரில் போட்டியிடுவது குறித்து நாளை மாலைக்குள் முடிவு அறிவிக்கப்படும் என திருமாவளவன் தெரிவித்தார்.