புதிய கட்சி தொடங்க உள்ளேன்: தீபா கணவர் மாதவன்

புதிய கட்சி ஆரம்பிக்க உள்ளேன், அதை பற்றி விரைவில் அறிவிப்பேன் என தீபாவின் கணவர் மாதவன் சென்னை மெரினாவில் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவிற்கு பின் அதிமுக இரு அணிகளாக பிரிந்துள்ள நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ’எம்ஜிஆர்-அம்மா-தீபா’ பேரவை என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். இந்தநிலையில், ’எம்ஜிஆர்-அம்மா-தீபா’ இருந்து தீபாவின் கணவர் மாதவன் விலகியுள்ளார். சென்னை மெரினாவில் பேட்டி அளித்த அவர், எம்ஜிஆர்-அம்மா-தீபா பேரவையில் தீய சக்திகளின் தலையீடு உள்ளது. அது யார் என்பதை தகுந்த நேரம் வரும் போது அறிவிப்பேன் என கூறியுள்ளார். நான் புதிய கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வந்துள்ளேன் என கூறிய மாதவன் அது பற்றி விரைவில் அறிவிப்பேன் என்றார். மேலும், ஆர்.கே.நகரில் போட்டியிடுவது தொடர்பாக மக்களிடம் பேசி முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.