மரத்தில் மோதி கார் எரிந்தது: கார் பந்தய வீரர் மனைவியுடன் உயிரிழப்பு

சென்னை‌‌ எம்.ஆர்.சி நகரில் சொகு‌சு கார் ஒன்று மரத்தில் மோதி வி‌பத்திற்குள்ளானதில் கார் பந்தய வீரரும் அவரது மனைவியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.‌

அஷ்வின் சுந்தர் என்பவர் அவரது மனைவியுடன் நள்ளிரவில் ஹோட்டலில் உணவருந்திவிட்டு ஆதம்பாக்கத்தி‌ல் இருந்து ‌சென்று கொண்டிருந்தார். எம்.ஆர்.சி நகர் வந்தபோது திடீரென நிலை தடுமாறிய கார், சாலையோரம் இருந்த மரத்தின் மீது அதிவேகத்தில் மோதியது. இதை‌த்‌தொடர்ந்து காரில் தீ பற்றிக்கொண்டது. இதில் இருவ‌ரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.