செய்திகள் உண்மை உடனுக்குடன்

விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு

கடலூரில் பாதாள சாக்கடையை சுத்தப்படுத்தும் பணியின்போது, விஷவாயுத் தாக்கி மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

கடலூரில் மோகினிபாலம் என்ற இடத்தில், துப்புரவுத் தொழிலாளர்கள் பாதாள சாக்கடையை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்களை விஷவாயு தாக்கியது. இதில், மூன்று பேரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். பாதாள சாக்கடையை சுத்தப்படுத்தும்போது விஷவாயு தாக்கி மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்தது தொடர்பாக கடலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விஷ வாயு தாக்கி உயிரிழந்த மூன்று தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டு, கடலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக கொண்டு செல்லப்பட்டன.