செய்திகள் உண்மை உடனுக்குடன்

1000 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன: அமைச்சர் தங்கமணி

தேர்தல் பரப்புரையில் வாக்குறுதி அளித்தபடி ஒரு வருடத்திற்குள்ளாக ஆயிரம் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில், பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய, காங்கிரஸ் எம்எல்ஏ பிரின்ஸ், உச்சநீதிமன்ற உத்தரவுபடி, நெடுஞ்சாலையில் உள்ள மதுக்கடைகள், பள்ளி, கோவில், குடியிருப்பு பகுதிகளில் உள்ள மதுக்கடைகள் மூடப்படாமல் உள்ளதாக குறிப்பிட்டார். இதற்கு பதிலளித்த மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் தங்கமணி, சட்டப்பேரவைத் தேர்தலில் அளித்த வாக்குறுதியின்படி, ஒரு வருடத்திற்குள்ளாகவே, ஆயிரம் மதுக்கடைகள் மூடப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.