செய்திகள் உண்மை உடனுக்குடன்

எதைப்பற்றியும் கவலைப்படாத அரசு: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

திமுக மாவட்டச் செயலாளர்களுடன் கட்சியின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் நிலவி வரும் பல்வேறு பிரச்னைகள் குறித்தும், அரசியல் நிலவரம் குறித்தும் இதில் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இந்தக் கூட்டத்தின் பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின், வறட்சி மற்றும் நீர்நிலைகளை புனரமைத்தல் போன்ற நடவடிக்கைகள் குறித்து தற்போதைய அரசு கவலைப்படவில்லை என குற்றம்சாட்டினார். சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்படும் என நம்புவதாக ஸ்டாலின் அப்போது தெரிவித்தார்.