செய்திகள் உண்மை உடனுக்குடன்

தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் வெப்பம் மேலும் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இரண்டு நாட்களில் 2 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பம் அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. சென்னையில் 38 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது. வங்கக்கடலில் அந்தமான் அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வடக்கு திசையில் மியான்மார் நோக்கி நகர்ந்து வருவதால், தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு இல்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.