செய்திகள் உண்மை உடனுக்குடன்

தண்ணீர் தேடி வந்த யானைக்கு நிகழ்ந்த சோகம்

சத்தியமங்கலம் அருகே சேற்றில் சிக்கிய யானை பத்திரமாக மீட்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த பவானி சாகர் அணையின் நீர்த்தேக்கப்பகுதிக்கு தண்ணீர் தேடி வந்த யானை ஒன்று சேற்றில் சிக்கிக் கொண்டது.இதுகுறித்த தகவலை அப்பகுதி மக்கள் உடனடியான வனத்துறையினருக்கு தெரிவித்தனர்.

இதையடுத்து, நிகழ்விடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் யானையை மீட்பதற்கு தொடர் முயற்சி மேற்கொண்டனர். கயிறு மற்றும் பொக்லைன் எந்திரம் ஆகியவற்றின் உதவியுடன், சேற்றில் சிக்கிய யானையை மீட்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. 4 மணி நேர தொடர் போராட்டத்திற்கு பின் பத்திரமாக மீட்கப்பட்ட காட்டு யானை, மீண்டும் வனத்திற்குள் கொண்டு விடப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் யானைகள் தண்ணீருக்காக காட்டுக்குள் இருந்து விவசாய நிலப்பகுதிக்கும் மக்கள் வசிக்கும் பகுதிக்கும் வருவது அதிகரித்து வருகின்றன. இதனை தடுக்க காட்டுக்குள் தற்காலிக தண்ணீர் தொட்டிகள் அமைக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்திருக்கிறது.