அதிமுக கவுன்சிலர் உயிரிழப்பு

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே கார் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த அதிமுக ஒன்றிய கவுன்சிலர் உயிரிழந்தார். கடந்த 9ஆம் தேதி பூனிமாங்காடு பகுதியில் தேர்தல் பரப்புரை முடித்து அதிமுக கவுன்சிலர் குணாளன் வீடு திரும்பும் போது கார் டயர் வெடித்து விபத்தில் சிக்கினார். மருத்துவமனையில் அவசர பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்தார்.