செய்திகள் உண்மை உடனுக்குடன்

சிரியாவில் அமைதியை நிலைநாட்ட 250 அமெரிக்க சிறப்பு படையினர்: ஒபாமா

Obama png

சிரிய உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவரத் தேவையான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் அமெரிக்க அதிபர் ஒபாமா ஜெர்மனியில் உள்ள ஹானோவர் நகரில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, சிரியாவில் நடைபெற்று வரும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் தாக்குதலை எதிர்க்க சிரியாவின் உள்நாட்டுப் படைவீரர்களுக்கு ஆதரவாக அமெரிக்காவிலிருந்து 250 சிறப்புப் படை வீரர்களை அனுப்பவிருப்பதாகக் கூறினார்.

மேலும், இந்த சிறப்புப் படைவீரர்கள் அனைவரும் ஐ.எஸ். அமைப்புடன் நேரடியாகப் போரிடப் போவதில்லை எனவும் சிரிய உள்நாட்டுப் படை வீரர்களுக்கு சிறப்புப் பயிற்சிகளை வழங்குவதோடு, தேவையான மேலதிக உதவிகளையும் வழங்குவார்கள் எனவும் தெரிவித்தார்.

ஏற்கனவே சிரியாவில் இருக்கும் அமெரிக்கப் படைவீரர்களுக்கு ஆதரவாகவும் இந்த சிறப்புப் படையினர் செயல்படுவார்கள் என்றும் ஒபாமா குறிப்பிட்டார்.