செய்திகள் உண்மை உடனுக்குடன்

டொனால்ட் ட்ரம்ப் ஒருபோதும் அமெரிக்காவின் அதிபராக முடியாது: பெர்னி சாண்டர்ஸ் கருத்து

Sanders trump

டொனால்ட் ட்ரம்ப் ஒருபோதும் அமெரிக்காவின் அதிபராக முடியாது என்று ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் இருக்கும் பெர்னி சாண்டர்ஸ் கூறியுள்ளார்.

பருவநிலை மாறுபாடு என்பது வெறும் வதந்தி என்ற கருத்தைக் கொண்டிருக்கும் ட்ரம்பை அமெரிக்கர்கள் ஆதரிக்கமாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

அமெரிக்காவில் அரசியல் ரீதியிலான புரட்சி ஏற்படுவதற்கு மக்கள் அனைவரும் தமக்‌கு வாக்களிக்க வேண்டும் என்றும் சாண்டர்ஸ் கேட்டுக்கொண்டார். சுமார் 40 மாநிலங்களில் அதிபர் வேட்பாளர்களுக்கான தேர்தல்கள் முடிந்துவிட்ட நிலையில், ஜனநாயகக் கட்சியில் ஹிலாரி கிளிண்டனும் குடியரசுக் கட்சியில் டொனால்ட் ட்ரம்பும் முன்னிலை வகிக்கிறார்கள்.