கழிவறைக்குள் சென்ற நபர் ஐயோ.! அம்மா..!

Thai

தாய்லாந்தில் வீட்டின் கழிப்பறை வழியாக புகுந்த மலைப்பாம்பு கடித்ததில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்தார்.

தாய்லாந்து தலைநகர் பேங்காக்குக்குத் கிழக்கில் உள்ள சாச்சோயேன்சாவோ நகரைச் சேர்ந்தவர் அட்டாபார்ன். இவரது வீட்டின் கழிப்பறை வழியாக 10 அடி நீள மலைப்பாம்பு புகுந்தது. இதை அறியாமல் கழிப்பறைக்குள் சென்ற அவரை மலைப்பாம்பு கடித்துக் குதறியது.

இதையடுத்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் வந்து அட்டாபார்னை மீட்டு அந்த பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். கழிப்பறையை உடைத்து மலைப்பாம்பை வெளியில் எடுத்த தீயணைப்புத் துறையினர், அதனை காட்டில் விட்டனர்.

மலைப்பாம்பு கடித்ததில், இடுப்புப் பகுதிக்கு கீழ் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அட்டாபார்ன், தற்போது தேறி வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்த சம்பவத்தை விவரித்த அட்டாபார்ன், மலைப்பாம்பு எப்படி கழிப்பறைக்குள் வந்தது என்று தெரியவில்லை. பாம்பு கடித்ததில் நினைவிழந்துவிட்டேன் என்று அதிர்ச்சி விலகாமல் தெரிவித்தார்.