இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சரானார் லைபர்மேன்

Leiberman

இஸ்ரேலின் புதிய பாதுகாப்புத்துறை அமைச்சராக லைபர்மேன் பதவி ஏற்றுக்கொண்டார்.

நாட்டின் நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் லைபர்மேன் பாதுகாப்புத்துறை அமைச்சராக 55 பேர் ஆதரவாகவும், 43 பேர் எதிராகவும் வாக்களித்தனர். முன்னர் வெளியுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில் லைபர்மேன் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான கருத்துகள் பலவற்றைத் தெரிவித்தவர். புதிய பாதுகாப்புத்துறை அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டவுடன் பேசிய அவர், பொறுப்பான முறையில் தன்னுடைய செயல்பாடு இருக்கும் என்று உறுதி அளித்துள்ளார்.

இஸ்ரேலின் பாதுகாப்பை க‌வனத்தில் கொண்டு தங்களுடைய செயல்பாடு இருக்கும் என்று தெரிவித்துள்ள பிரதமர் நெதன்யாகு, அதே வேளையில், பிராந்திய வளர்ச்சி நடவடிக்கைகள் மூலம் நாட்டில் அமைதியைக் கொண்டு வரத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் குறிப்பி‌ட்டுள்ளா‌ர்.‌