அமெரிக்க தாக்குதலில் ஐஎஸ் அமைப்பின் தலைவர் பாக்தாதி பலி?

Bhakthathi

ஈராக்கில் அமெரிக்கக் கூட்டுப்படை நடத்திய தாக்குதலில் ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபுபக்கர் பாக்தாதி கொல்லப்பட்டதாக சிரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சிரியா மற்றும் ஈராக்கில் கால்பதித்துள்ள ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையினர் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகின்றனர். சிரிய எல்லைப்பகுதியில் உள்ள ஐஎஸ் படைதளம் மீது அமெரிக்கக் கூட்டுப்படைகள் கடந்த வாரம் நடத்திய தாக்குதலில் ஐஎஸ் அமைப்பின் தலைவர் இப்ராஹிம் அபுபக்கர் பாக்தாதி உள்ளிட்டோர் படுகாயமடைந்ததாகத் தகவல்கள் வெளியாகின.

இந்தநிலையில், அமெரிக்கக் கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் பாக்தாதி கொல்லப்பட்டதாக சிரியாவின் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால், இந்த தகவலை அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகன் மற்றும் ஐஎஸ் அமைப்பின் ஊடகப் பிரிவான அல் அமாக் போன்றவை உறுதி செய்யவில்லை.