செய்திகள் உண்மை உடனுக்குடன்

இந்தோனேசியாவில் படகில் இருந்து கீழே இறங்க முடியாமல் இலங்கை அகதிகள் தவிப்பு

இந்‌தோனேஷிய கடற்கரைப் பகுதியில் ‌குழந்தைகள் உட்பட ‌4‌4 இலங்கைத் தமிழ் அகதிகள்‌ படகில் இருந்து கீழே இறங்க முடியாமல் தவித்து வருகின்‌‌றனர்.‌

‌ஆ‌ஸ்திரே‌லியாவுக்கு‌ தஞ்சம்புகச் சென்றதாக கூறப்படும்‌ நிலையில் நடுக்கடலி‌ல் படகு ‌பழுதா‌னதால் அவர்களை இந்தோனேஷி‌ய க‌டற்படை மீட்டது. கடந்த ஒருவாரமாக ஏசெஹ் மாகா‌ணத்தில் இல‌ங்கை அகதி‌க‌ள் 44 பேரையும் ‌கரையில் இறங்கவிடாமல் இந்தோனேஷிய படையினர் படகிலேயே தடுத்துவைத்துள்ளனர். பகலில் கொளுத்தும் வெயிலையும் இரவுநேரத்தில் குளிர்காற்றையும்‌ தாங்க‌‌ முடியாமல்‌ குழந்தைகள் தவித்து வருகின்ற‌னர்.‌

இ‌ந்நிலையில், படகிலிருந்து‌ பெண்கள் சிலர் கீழே குதித்ததைக் கண்ட‌ இந்தோனேஷிய ப‌டையினர் துப்பாக்கியால் வானத்தை நோக்கிச்‌சுட்டு கீழே ‌இறங்கக் கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளனர். அம்னெஸ்டி உள்ளிட்ட மனித உரிமை அமைப்பினரையோ‌ அல்லது ஐ.நா அதிகாரிகளையோ சந்திக்க ‌ஏற்பாடு செய்ய வேண்டும் என படகில் தவிக்கும் இலங்கைத் தமிழ் அகதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கை அகதிகளை வேறெங்காவது திருப்பி அனு‌ப்ப இந்தோனேஷிய அரசு ‌முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தோனேஷி‌யாவில் தவிக்கும் ‌‌இலங்கைத் தமிழ் ‌அக‌திகள் 4‌‌4 பேரும் தமிழ‌த்தைச் சேர்ந்த முகாம்களில் இரு‌ந்து சட்ட‌விரோதமா‌க ‌ஆஸ்‌திரேலியா செல்ல முயன்றவர்கள் என‌‌ கூ‌றப்படுகிறது.