செய்திகள் உண்மை உடனுக்குடன்

ட்ரம்பை கொலை செய்ய 19 வயது இளைஞர் முயற்சி

Donalt

அமெரிக்காவில் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்பை கொலை செய்ய முயன்ற பிரிட்டனை சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

லாஸ் வேகாஸில் நடந்த தேர்தல் கூட்டத்தில், 19 வயதான மைக்கேல் சான்போர்ட் என்பவர் போலீஸ் அதிகாரியின் துப்பாக்கியை பறிக்க முயன்றுள்ளார். உடனடியாக அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில் ட்ரம்பை கொலை செய்யவே தான் லாஸ் வேகாஸ் வந்ததாகவும், போலீஸ் அதிகாரியின் துப்பாக்கியை பறித்ததாகவும் சான்போர்ட் வாக்குமூலம் அளித்துள்ளார். இதற்காக அவர் ஒரு வருடமாக திட்டமிட்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.