செய்திகள் உண்மை உடனுக்குடன்

ராணுவ ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்திய பயங்கரவாதிகள்

சிரியாவில், ராணுவத்திற்குச் சொந்தமான ஹெலிகாப்டர் சுட்டுவீழ்த்தப்பட்ட காட்சிகள் வெளியாகியுள்ளது.

சிரியா ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பகுதியில், தரையிலிருந்தபடி பயங்கரவாதிகள் இருவர் அந்த ஹெலிகாப்டரை சுட்டுவீழ்த்தியுள்ளனர். பின்னர் அது வானத்தில் கரணம் அடித்தபடி கீழே விழும் காட்சிகள் வெளியாகியிருக்கின்றன.

அப்போது “கடவுளே சிறந்தவர் கடவுளே சிறந்தவர்’ என்கிற குரல் ஒலிக்கும் காட்சிகளும் அதில் இடம்பெற்றிருக்கின்றன. இந்த சம்பவத்தில், ஹெலிகாப்டரில் சென்ற ரஷ்ய விமானிகள் இருவரும் உயிரிழந்துவிட்டனர்.