டைனோசர் வாழ்ந்த பகுதிகள் கண்டுபிடிப்பு

Dinosaurs

ஜெர்மனியின் மேற்கு பகுதியில் இறைச்சி உண்ணும் இனத்தை சேர்ந்த டைனோசர்கள் வாழ்ந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதை உறுதி படுத்தும் வகையில் அந்த வகை இனத்தை சேர்ந்த டைனோசரின் பல்லை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளதாக கூறப்படுகிறது.

இதன் அடிப்படையில் மேற்கு ஜெர்மனி சுமார் 15 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் கடல் சூழ்ந்த பகுதியாக இருந்துள்ளது. இந்த ஆராய்ச்சியை தொடர்வதால் பல உண்மைகள் வெளியாகும் என ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்த ஆராய்ச்சியில் தற்போது ஜெர்மனியின் பெர்லின் மற்றும் ஹேம்பர்க் நகரங்களுக்கு இடைப்பட்ட பகுதிகளில் டைனோசர்கள் வாழ்ந்துள்ளது என தெரியவந்துள்ளது.