செய்திகள் உண்மை உடனுக்குடன்

ஜெர்மனி துப்பாக்கிச் சூடு 9 பேர் உயிரிழப்பு

ஜெர்மனி நாட்டின் மியூனிச் நகரில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் கொல்லப்பட்டனர்.

நகரிலுள்ள வணிக வளாகத்தில் புகுந்த அந்த நபர் அங்கிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட ஆரம்பித்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அச்சத்தில் சிதறி ஓடினர். துப்பாக்கிச் சூட்டில், 9 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர். அதேவேளையில், தாக்குதல் நடத்திய நபர் தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வணிக வளாகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு, பயங்கரவாதத் தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகிக்கிப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்தை கூட்டியுள்ளார். ஜெர்மனியில், கடந்த வாரம் ரயிலில் இளைஞர் ஒருவர் பயணிகளை கோடாரியால் தாக்கிய நிலையில், தற்போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது