ஜெர்மனியில் தாக்குதல் நடத்தியவர் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்

Grmani

ஜெர்மனியின் முனிச் நகரில் உள்ள வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் 18 வயது நிரம்பிய இளைஞர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அவர் ஜெர்மனி மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளின் குடியுரிமை பெற்றவர் என்றும், பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடையவரா என்பது குறித்து விசாரித்து வருவதாகவும், மியூனிக் காவல்துறைத் தலைவர் ஆண்ட்ரே தெரிவித்துள்ளார். ஒலிம்பியா வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் கொல்லப்பட்டதாகவும், 18 பேர் காயமடைந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதில் மூன்று பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாக்குதல் நடத்திய இளைஞர் தற்கொலை செய்து கொண்டதாகவும், அவரது உடல் வணிக வளாகத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் கிடந்ததாகவும் மியூனிக் காவல்துறைத் தலைவர் தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, ஜெர்மனிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.