செய்திகள் உண்மை உடனுக்குடன்

ஜெர்மனியில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: பலர் உயிரிழந்ததாகத் தகவல்

3500

ஜெர்மனியின் BAVARIA மாகாணத்தில் இரு பயணிகள் ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் பலர் உயிரிழந்தனர். 100க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

MUNICH நகரில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள BAD AIBLING என்ற இடத்தில் இந்த விபத்து நிகழ்ந்ததாகவும், விபத்துக்குள்ளான இரு ரயில்களில் ஒன்றின் பெட்டிகள் தடம்புரண்டு கவிழ்ந்துள்ளதாகவும் ஜெர்மனி செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

விபத்து நடந்த இடத்தில் பேரிடர் கால மீட்புக்குழுவினர் ஹெலிகாப்டர்கள் உதவியுடன் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், ஹோல்ஸ்கிர்சென் மற்றும் ரோசன்ஹெய்ம் இடையேயான பாதையில் ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.