லிபியா அகதிகள் படகில் 22 பேர் மூச்சு திணறி உயிரிழப்பு

YYYYYY

லிபியாவில் இருந்து மத்திய தரைக்கடல் வழியே வந்த அகதிகள் படகில் மூச்சுத் திணறி 22 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

லிபியாவில் உள்நாட்டு போர் நடைபெற்று வருவதால் அங்கிருந்து மக்கள் அகதிகளாக நாள்தோறும் படகு மூலம் ஐரோப்பிய நாடுகளுக்கு வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் லிபியாவில் இருந்து மத்திய தரைக்கடல் வழியே மரப்படகில் 1000-க்கும் மேற்பட்டோர் பயணித்தனர்.

படகில் அளவுக்கு அதிகமான அகதிகள் பயணித்ததாலும், எதிர்பாராத விதமாக காற்று அதிக வேகமாக வீசியதாலும் படகு இத்தாலி கடற்பகுதியில் நடுக்கடலில் தத்தளித்து. இதில், படகில் பயணித்த 22 பேர் மூச்சுத்திணறி உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து தகவலறிந்து வந்த இத்தாலி கடற்படை மீட்பு குழுவினர் படகில் இருந்தவர்களை மீட்டனர். படகில் அதிக பேர் பயணித்ததால் அவர்கள் இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். லிபிய உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டு அகதிகளாக வெளியேறிய சுமார் 1,32,000 பேரை இதுவரை மீட்டுள்ளதாக இத்தாலி கடற்படை தெரிவித்துள்ளது.