செய்திகள் உண்மை உடனுக்குடன்

'இந்தியா- அமெரிக்கா சிறந்த நட்பு நாடுகளாக மாறும்'..மோடி செயல்பாடுகளுக்கு ட்ரம்ப் பாராட்டு

Trump

அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டால் இந்தியா- அமெரிக்கா இடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவேன் என குடியரசு கட்சியின் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் உறுதி அளித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப், பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்ற ட்ரம்ப், இந்திய அமெரிக்கர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது, தான் அதிபரானால் இந்தியாவும் அமெரிக்காவும் சிறந்த நட்பு நாடுகளாக மாறும் என கூறினார்.

இந்தியாவுடனான வர்த்தக உறவை மேம்படுத்துவேன் என கூறிய ட்ரம்ப் இந்தியாவுக்காக இரண்டு மிகப்பெரிய வளர்ச்சி திட்டங்களை வைத்திருப்பதாக தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் பொருளாதார சீர்திருத்தங்களை வரவேற்பதாக கூறிய ட்ரம்ப், மோடியுடன் இணைந்து செயல்பட விரும்புவதாக தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளையும் ட்ரம்ப் ஆதரித்துள்ளார்.