செய்திகள் உண்மை உடனுக்குடன்

காஸ்ட்ரோ மறைவு குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்த டொனால்ட் ட்ரம்ப்

Castro-trump

கியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ மறைவு குறித்து அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் ட்வீட் செய்துள்ளார்.

இதுதொடர்பாக பதிவிட்டுள்ள ட்ரம்ப், காஸ்ட்ரோ மறைந்துவிட்டார் என்ற வாசகத்தோடு ஆச்சர்யக்குறியோடு முடித்துள்ளார். ஏகாதிபத்தியத்தைத் தனது இறுதி மூச்சு வரை எதிர்த்த பிடல் காஸ்ட்ரோவைக் கொல்ல அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ 638 முறை முயற்சித்தது. முன்னதாக, அரைநூற்றாண்டு கால பகையைத் தீர்த்து தற்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, கியூபாவுடன் உடன்பாடு செய்துகொண்டார். இந்த விவகாரம் குறித்து தனது தேர்தல் பரப்புரையில் கடுமையாக விமர்சித்த ட்ரம்ப், ஒபாமா அரசு கியூபாவுடன் செய்துகொண்ட அனைத்து ஒப்பந்தங்களையும் ஒரே ஒரு உத்தரவு மூலம் ரத்து செய்வேன் என்று கடந்த செப்டம்பரில் குறிப்பிட்டிருந்தார்.