ஒபாமா பாகிஸ்தானுக்கு செல்லாதது ஏன்?.. வெள்ளை மாளிகை பதில்

Obama

அமெரிக்க அதிபரான பராக் ஒபாமா, தனது பதவிக்காலத்தில் ஒருமுறைகூட பாகிஸ்தானுக்குச் செல்லாதது ஏன் என்ற கேள்விக்கு வெள்ளை மாளிகை பதிலளித்துள்ளது. 

அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், பாகிஸ்தான் அதிபர் நவாஸ் ஷெரீபிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இந்த தகவலை வெளியிட்ட பாகிஸ்தான் அரசு, அந்நாட்டுக்கு வர ட்ரம்ப் விருப்பம் தெரிவித்ததாகவும் கூறியிருந்தது. இந்தநிலையில், தற்போதையை அமெரிக்க அதிபரான அமெரிக்க அதிபரான பராக் ஒபாமா, கடந்த 8 ஆண்டு பதவிக்காலத்தில் பாகிஸ்தானுக்கு ஒருமுறை கூட செல்லாதது ஏன் என்ற கேள்வி வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜோஷ் எர்னஸ்ட் முன்பாக எழுப்பப்பட்டது.

அந்த கேள்விக்குப் பதிலளித்த எர்னஸ்ட், இதற்கு பதில் கூறுவது சிறிது சிக்கலானது. ஏனெனில் இருநாடுகளின் தேசிய பாதுகாப்பு கொள்கைகள் தொடர்பான முடிவுகள் ஒன்றுடன் ஒன்று பொருந்தாதது. அமெரிக்கா-பாகிஸ்தான் இடையிலான உறவு என்பது கடந்த 8 ஆண்டுகளாக சுமூகமாகவே இருக்கிறது. குறிப்பாக ஒபாமா உத்தரவுப்படி பாகிஸ்தான் மண்ணில் இருந்து ஒசாமா பின்லேடனை அகற்றிய பின்னர் இருநாடுகள் உறவில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவித்தார். அதேநேரம், அதிபர் ஒபாமா பாகிஸ்தானுக்கு செல்ல விரும்பியதாகவும் எர்னஸ்ட் தெரிவித்தார்.