சிரியாவில் பள்ளிகள் மீது ரஷ்ய போர் விமானங்கள் குண்டு வீசித் தாக்குதல்: ஐ.நா கண்டனம்

Ban ki moon fb

சிரியாவில் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் மீது விமானப் படைத் தாக்குதல் நடத்தி 50 அப்பாவிகள் கொல்லப்பட்டததற்கு அமெரிக்காவும் ஐக்கிய நாடுகள் சபையும் கண்டனம் தெரிவித்துள்ளன.

சிரியாவின் அலெப்போ மற்றும் இத்லிப் பகுதிகளில் இரண்டு பள்ளிகள் மற்றும் ஐந்து மருத்துவமனைகள் மீது ரஷ்ய போர் விமானங்கள் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

இது சர்வதேச விதிகளை அப்பட்டமாக மீறிய செயல் என ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதலைக் கண்டிப்பதாக அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையும் அறிக்கை வெளியிட்டுள்ளது.