செய்திகள் உண்மை உடனுக்குடன்

பொதுமக்கள் வெளியேறும் வரை போர் நிறுத்தம்

Aleppo2
Aleppo3
Aleppo4
Aleppo5

அலப்போ நகரில் கிளர்ச்சியாளர்கள் குழுவிற்கும் அரசிற்கும் இடையே நடந்து வந்த போர் பொதுமக்கள் வெளியேறும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சிரியா நாட்டில் நடந்து வரும் உள்நாட்டுப் போரினால் பல லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்ததுடன் 70 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் உள்நாட்டிலேயே அகதிகளாக உள்ளனர். மேலும் பலர் சிரியாவை விட்டு வெளியேறி ஐரோப்பிய நாடுகளுக்கும் அகதிகளாக சென்ற வண்ணம் உள்ளனர். இதற்கிடையில் சிரியாவிலிருந்து கிளம்பிச் செல்லும் வழியில் கடலிலேயே மூழ்கி நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழக்கும் சோகமும் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது

சிரியா நாட்டில் ராணுவத்திற்கும் கிளர்ச்சியாளர் குழுவுக்கும் இடையே கடந்த நான்கு ஆண்டுகளாக தீவிரமாக சண்டை நடந்து வருகிறது. அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள் குழு அலப்போ நகரை தலைமையிடமாக கொண்டது. கிளர்ச்சியாளர்களின் பெரும்பாலான இடங்களை ராணுவம் கைப்பற்றிய நிலையில், சண்டை தீவிரமடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் அலப்போவை விட்டு உடனடியாக வெளியேறும்படியும் அரசு கூறியுள்ளது. நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வரும் போர் தற்போது உச்சத்தை எட்டியுள்ளது என்றே கூறலாம். இன்று காலை கிளர்ச்சியாளர்களுக்கும் அரசுக்கும் நடைபெற்ற ஒப்பந்தத்தின்படி பொதுமக்கள் வெளியேறும் வரை போர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் அந்நகரை விட்டு பேருந்துகளின் உதவியுடன் வெளியேறி வருகின்றனர்.