செய்திகள் உண்மை உடனுக்குடன்

ஜெர்மனியில் 12‌பேர் கொல்லப்பட்ட சம்பவம்... ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்பு

ஜெர்மனியில்‌ கனரக வாகனத்தை மோதச் செய்து 12 பேர் கொல்லப்பட்ட தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

தங்களது அமைப்பைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு தீவிரப் பயிற்சியளி்த்து இத்தாக்குதலை அரங்கேற்றியதாக ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நேற்று முன்தினம் பெர்லின் நகரில் உள்ள கிறிஸ்துமஸ் மார்க்கெட் பகுதியில் கனரக வாகனத்தை மோதச் ‌செய்து நடத்தப்பட்ட தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர்.50க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஐஎஸ் அமைப்பு இத்தகவலை வெளியிட்டுள்ளது.இதே போன்று கடந்த ஜூலை மாதம் ஃபிரான்சின் நீஸ் நகரில் தேசிய நாள் கொண்டாட்டத்தின்போது, தாக்குதல் சம்பவம் நடந்தது.