துருக்கி வீரர்கள் உயிருடன் எரிப்பு... ஐ.எஸ். பயங்கரவாதிகள் வெறிச்செயல்

சிரியாவில் இரு துருக்கிய வீரர்களை உயிருடன் எரிக்கும் வீடியோவை ஐ.எஸ். பயங்கரவாதிகள் வெளியிட்டுள்ளனர்.

தங்கள் நாட்டைச் சேர்ந்த 16 வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி தரப்போவதாக துருக்கி கூறிய நிலையில், இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. கூண்டில் அடைக்கப்பட்ட இரு வீரர்கள் வெளியே இழுத்துவரப்பட்டு, தீவைத்துக் கொளுத்தப்படுவது இந்த வீடியோவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 19 நிமிட நீளம் கொண்ட இந்த வீடியோ இணையதளங்களில் மிக வேகமாகப் பரவி வருகிறது. இருப்பினும் துருக்கியில் இந்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்ட இணையதளங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. ‌ இரு ஆண்டுகளுக்கு முன் ஜோர்டானைச் சேர்ந்த விமானி ஒருவரை இதே முறையில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் கொலை செய்தார்கள்.