செய்திகள் உண்மை உடனுக்குடன்

சிரியாவில் டேங்கர் லாரி குண்டு வெடிப்பு... 48 பேர் பலி

Bomp blast

சிரியாவில் அலெப்போ மாநிலத்தில் தீவிரவாதிகள் நடத்திய டேங்கர் லாரி குண்டு வெடிப்பு தாக்குதலில் 48 பேர் உயிரிழந்தனர்.

சிரியா மற்றும் துருக்கி நாடுகளுக்கு இடையே உள்ள அலெப்போ மாநிலத்தில், அஜாஸ் நகர நீதிமன்றம் அருகில் ஐஎஸ் தீவிரவாதிகள் எரிபொருள் நிரப்பிய டேங்கர் லாரி ஒன்றில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை கட்டி, பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் வெடிக்கச் செய்துள்ளனர். இந்த தாக்குதலில் 48 பேர் உடல்சிதறி உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர்களில் சிலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இறந்தவர்களின் சடலங்கள் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு எரிந்து கரிக்கட்டைகளாக காணப்படுவதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.