செய்திகள் உண்மை உடனுக்குடன்

நீர் நிலைகளில் கொட்டப்பட்ட எண்ணெய்.. லட்சக்கணக்கானோர் குடிநீர் இன்றி தவிப்பு

Syria fb

உள்நாட்டுப் போர் நடந்துவரும் சிரியாவில், குடிநீர் கிடைக்காமல் லட்சக்கணக்கான மக்கள் தவித்து வருகின்றனர்.

சிரியா தலைநகர் டமாஸ்கஸை சுற்றியுள்ள பகுதிகளில் கடுமையான குடிநீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது.

அந்தப் பகுதியில் கிளர்ச்சிக் குழுக்களுக்கும் அரசுப்படைகளுக்கும் இடையே தொடர்ந்து சண்டை நடந்து வருவதால், குடிநீர் விநியோகிக்கும் குழாய்கள் முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டுள்ளன. நீர்நிலைகளில் எண்ணெய் கொட்டப்பட்டிருப்பதால், அங்கிருந்து நீர் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். குடிநீர்ப் பற்றாக்குறையால், மக்களுக்கு தொற்றுநோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக ஐ.நா. எச்சரித்துள்ளது.