‌கடும் குளிரில் அவதிப்படும் அகதிகள்

கிரீஸ் நாட்டில் தஞ்சம் அடைந்துள்ள அகதிகள் அனைவரும் கடுமையான குளிரில் தவித்து வருகின்றனர்.

கிரீஸில் கடுமையா‌ன பனிப்பொழிவு நீடிக்கிறது. அகதிகள் முகாம்கள் மீது பனி குவிந்து காணப்படுகிறது. இந்த நிலையில் வெப்பநிலையும் மைனஸ் 20 டிகிரி செல்சியஸாக குறைந்துள்ளது. சாதாரண முகாம்களில் தங்கியுள்‌ள அகதிகள் குளிரில் இருந்து பாதுகாத்து கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். கூடாரங்கள் பனியால் போர்த்தப்பட்டுள்‌ளன. குளிரில் இருந்து தற்காத்துக் கொள்ளத் தேவையான எந்த உபகரணங்களும் இல்லாமல் தவிப்பதாக அகதிகள் கூறுகின்றனர். போர் உள்ளிட்ட காரணங்களால் சொந்த நாட்டை விட்டு வெளியேறி மற்ற நாடுகளில் முகாம்களில் தஞ்சமடைந்துள்ள ஆயிரக்கணக்கான அகதிகள் இப்படி குளிரால் அவதிப்படுகின்றனர்.