செய்திகள் உண்மை உடனுக்குடன்

ரஷ்யாவுக்கும் எனக்கும் தொடர்பில்லை... ட்ரம்ப் விளக்கம்

Rump

ரஷ்யாவுக்கும், தமக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் அந்தநாட்டில் தனக்கு கடன் எதுவும் கிடையாது என்று அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் முதன்முறையாக செய்தியாளர்களைச் சந்தித்த ட்ரம்ப், ரஷ்ய அதிபர் புடினுக்கு ட்ரம்பைப் பிடிக்கும் என்பது வலிமையான காரணி போன்றதே தவிர உண்மைத் தன்மையை சோதிப்பது போன்றதல்ல. எனது வருமான வரி கணக்குகள் குறித்து ஆய்வு நடைபெற்றுக் கொண்டிருப்பதால் அது தொடர்பான தகவல்களை வெளியிட மாட்டேன். புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு முக்கியத்துவம் அளிக்க இருக்கிறேன். அதிக வேலைவாய்ப்பினை உருவாக்கும் நபராக நான் இருப்பேன். ட்ரம்ப் நிறுவனத்தின் அனைத்து பொறுப்புகளிலிருந்து எனது மகள் இவாங்கா ராஜினாமா செய்து விட்டார். அவருக்கும் ட்ரம்ப் தொழில்நிறுவனங்களுக்கும் எந்தவித தொடர்பும் இனி இருக்காது என்று பேசினார். அதேபோல ட்ரம்ப் தொழில்நிறுவனங்களின் பொறுப்புகளிலிருந்து டொனால்ட் ட்ரம்ப் விலகிவிட்டதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.