செய்திகள் உண்மை உடனுக்குடன்

ஆப்பிள் ஐபோன் வடிவில் துப்பாக்கி

Iphone

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் வடிவிலான துப்பாக்கிகள் விற்பனைக்கு வந்துள்ளதாக இங்கிலாந்து பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்காவில் தயாராகியுள்ள இந்த ஸ்மார்ட்போன் வடிவ துப்பாக்கியில் 9 மி.மீ. அளவு கொண்ட குண்டுகளைப் பயன்படுத்த முடியும். இணையதளம் ஒன்றில் விற்பனைக்கு வர உள்ள இந்த நவீன துப்பாக்கியை ஆன்லைனில் 12,000-த்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளதாக இங்கிலாந்து போலீசார் தெரிவித்துள்ளனர். பார்பதற்கு ஐபோன் போன்று காட்சியளிக்கும் இவற்றை ஒரே ஒரு பட்டன் மூலம் துப்பாக்கியாக மாற்ற முடியும். இந்தவகை துப்பாக்கிகள் பெல்ஜியம் வழியாக ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் நுழையலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.