செய்திகள் உண்மை உடனுக்குடன்

அமெரிக்கா என்ன அப்பாவிகள் நிறைந்த நாடா... ட்ரம்ப் கேள்வி

அமெரிக்காவின் தவறுகளால் ‌உலகம் முழுவதும் பலர் கொல்லப்பட்டிருப்பதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த ட்ரம்பிடம் , ரஷ்ய அதிபர் புதின் ஒரு கொலையாளி என கூறி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ட்ரம்ப், நம் நாட்டிலேயே நிறைய கொலையாளிகள் இருக்கின்றனர், அமெரிக்கா என்ன அப்பாவிகள் நிறைந்த நாடா என கேள்வி எழுப்பினார். புதின் மீது தான் மரியாதை வைத்திருப்பதாக கூறியுள்ள ட்ரம்ப், இஸ்லாமிக் ஸ்டேட் பயங்கரவாதிகளுக்கு எதிரான சண்டையில் ரஷ்யாவுக்கு ஒத்துழைக்க தயார் என்றும் கூறியுள்ளார். அமெரிக்காவை புதினுடன் ஒப்பிட்டு பேசியதற்காக ட்ரம்புக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். செனட் உறுப்பினர் பென் கார்டின், ஜனநாயக கட்சியின் நேன்சி பெலோசி உள்ளிட்டோர் ட்ரம்பின் ரஷ்ய ஆதரவு பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.