செய்திகள் உண்மை உடனுக்குடன்

ட்ரம்ப் தடை உத்தரவுக்கு எதிராக அணி திரளும் டெக் ஜாம்பவான்கள்

Trump

அமெரிக்க அதிபர் டொனல்ட் ட்ரம்ப்பின் குடியேற்ற தடை உத்தரவுக்கு எதிராக அந்நாட்டிலுள்ள முக்கியமான டெக் நிறுவனங்களின் தலைவர்கள் சட்டரீதியான போராட்டத்தை முன்னெடுக்க உள்ளனர்.

இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் உலகின் 7 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அமெரிக்க விசா வழங்கத் தடை விதித்து அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டார். அதிபராகப் பதவியேற்ற பின்னர் ட்ரம்ப்பின் முதற்கட்ட நடவடிக்கைகளில் முக்கியமானதாகக் கருதப்படும் இந்த உத்தரவுக்கு எதிராக உலகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்த உத்தரவுக்கு அந்நாட்டு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்தநிலையில், ட்ரம்ப்பின் குடியேற்ற தடை உத்தரவுக்கு எதிராக ஆப்பிள், மைக்ரோசாப்ட், பேஸ்புக், ட்விட்டர், ஆல்பாபெட் ஆகிய நிறுவனங்களின் தலைவர்கள் சட்டரீதியான போராட்டத்தை முன்னெடுக்க முடிவு செய்துள்ளனர். ட்ரம்ப்பின் உத்தரவுக்கு எதிராக சுமார் நூறு நிறுவனங்கள் சார்பாக நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.