செய்திகள் உண்மை உடனுக்குடன்

பல்லாயிரம் உயிர்களை பறித்த ஹிட்லரின் ஆயுதம் ஏலம்

Hitler-telephone759

ஜெர்மனியை சேர்ந்த சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லர் பயன்படுத்திய தொலைபேசி ஏலத்திற்கு விடப்படுகிறது.

இரண்டாம் உலகப்போரின் போது இந்த தொலைபேசியின் மூலம் தான் ஹிட்லர் தனது அதிகாரம் மிக்க உத்தரவுகளை பிறப்பித்தார். எத்தனையோ உயிர்களை கொல்ல ஆணையிட்டதும் இந்த தொலைபேசியில் தான். சிவப்பு நிறமுடைய இந்த தொலைபேசி ஏலம் விடப்படுகிறது.

இந்த தொலைபேசி கடந்த 1945-ம் ஆண்டு ஜெர்மனியின் பெர்லின் நகரில் ஒரு பாதுகாப்பு கிடங்கு அறையில் கண்டு பிடிக்கப்பட்டது. தற்போது இது அமெரிக்காவின் மேரி லேண்டில் உள்ள செசாபீக் நகரின் அலெக்சாண்டர் மையத்தில் ஏலம் விடப்படுகிறது. ஏலத்தொகை ரூ.80 லட்சத்து 56 ஆயிரத்து 700 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ரூ.3 கோடிக்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏல நிறுவனம், ஹிட்லர் பயன்படுத்திய இந்த தொலைபேசியை ஹிட்லரின் அழிவுச் சாதனமான இது வரலாற்றிலேயே பேரழிவை ஏற்படுத்திய கொடூர ஆயுதம் என வர்ணித்துள்ளது.