செய்திகள் உண்மை உடனுக்குடன்

பாட்டிகளை பராமரிக்கும் 5 வயது சிறுமி

Baby

சீனாவில் பெற்றோரால் கைவிடப்பட்ட 5 வயது சிறுமி, தன் பாட்டியையும், கொள்ளு பாட்டியையும் பராமரித்து வரும் நிகழ்வு ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென் மேற்கு சீனாவின் சுன்யி நகரில் வசிக்கிறாள், 5 வயது சிறுமி வாங் அண்ணா. இவரின் தந்தை, இவர் கை குழந்தையாக இருக்கும் போதே சிறைக்குச் சென்று விட்டார். தாய் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு தன் மகளை கைவிட்டுச் சென்று விட்டார். அதன்பின், வாங் தனது பாட்டி மற்றும் கொள்ளு பாட்டி ஆகியோருடன் வசித்து வருகிறார். அவரின் இரண்டு பாட்டியும் மிகவும் வயதானவர்கள். பெற்றோர்களால் கைவிடப்பட்ட வாங், தனது பாட்டிகளை அன்புடன் அரவணைத்து பராமரித்து வருகிறார்.

ஒவ்வொரு நாளும் அதிகாலையில் எழுந்து காய்கறிகளைத் தோட்டத்திலிருந்து பறித்து வந்து சமைப்பது, வீட்டைச் சுத்தம் செய்வது, இரண்டு பாட்டிகளுக்குச் சாப்பாடு ஊட்டிவிடுவது, மூட்டு வலியால் பாதிக்கப்பட்ட பாட்டிகளை நடைபயிற்சிக்கு அழைத்து செல்வது என இவர் செய்யும் செயல்கள் ஆச்சரியப்படுத்துகின்றன. உயரம் எட்டாத நிலையில் ஒரு ஸ்டூலில் ஏறி நின்று சமையல் செய்கிறாள் வாங். பெற்றோரையே அலட்சயப்படுத்தும் இந்த கால குழந்தைகளுக்கு மத்தியில் இந்தச் சிறுமியின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.