செய்திகள் உண்மை உடனுக்குடன்

ஏலம் விடப்படும் ஹிட்லரின் அரிய புகைப்படங்கள்

Hitler

‌அடால்ஃப் ஹிட்லரின் நீண்ட நாள்‌ காதலி இவா பிரான் வீட்டில், ‌‌ஹிட்லரின் அரிய புகைப்படங்கள் நிறைந்த ஆல்பம் கிடைத்துள்ளது.

இந்தப் புகைப்படங்களை ஏலம் விட சி அண்ட் டி (C AND T) நிறுவனம் முன்வந்துள்ளது. இயற்கைச் சூழலில் ஹிட்லர் ஓய்வெடுக்கும் சில அரிய புகைப்படங்கள் இந்தப் பழமையான‌ ஆல்பத்தில் இடம் பெற்றுள்ளன. 1945ஆம் ஆண்டு ஜோசப் கெப்பல்ஸ் உள்ளிட்ட தலைவர்களுடன் ஹிட்லர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் அந்த ஆல்பத்தில் இடம்பெற்றுள்ளன. நாளை‌ ஏலத்துக்கு விடப்படும் ஹிட்லரின் ஆல்பத்துக்கு ஆரம்ப விலை ரூ.12 லட்சத்து 12 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.