செய்திகள் உண்மை உடனுக்குடன்

அமைதியை ஏற்படுத்துங்கள்: பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் சிறுமி கடிதம்

Untitled design (2)

இந்தியா-பாகிஸ்தான் இடையில் அமைதியை நிலை நாட்டுவதற்கான முயற்சிகளை பிரதமர் நரேந்திர மோடி மேற்கொள்ளுமாறு பாகிஸ்தானிய சிறுமி ஒருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாகிஸ்தானில் லாகூர் பகுதியில் வசித்து வரும் அகீதத் நவீத்(11), என்ற சிறுமி பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் உத்தரபிரதேச தேர்தலில் பெற்ற வெற்றி பெற்றதற்காக வாழ்த்துகளை தெரிவித்துள்ள அவர் இந்தியா-பாகிஸ்தான் இடையில் அமைதியை நிலை நாட்டுவதற்கான பணிகளில் பிரதமர் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

அகீதத் எழுதியுள்ள கடிதத்தில், திறமையான நிர்வாகத்தால் இந்திய மக்களின் இதயங்களை வென்றுள்ளீர்கள். அதனால்தான் உத்தரபிரதேச தேர்தலில் வெற்றி பெற்றுள்ளீர்கள். அதேபோன்று, பாகிஸ்தானில் உள்ள பலரின் இதயங்களை வென்று இரு நாடுகளுக்கும் இடையே நட்புணர்வை அதிகரித்து, அமைதியை நிலைநாட்ட நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். துப்பாக்கி குண்டுகள் வாங்குவதை விடுத்து, புத்தகங்களை வாங்குவோம். துப்பாக்கிகள் வாங்குவதை கைவிட்டு, ஏழை மக்களுக்கு தேவையான மருந்துகளை வாங்குவோம் என தனது இரண்டு பக்க கடிதத்தில் அகீதத் நவீத் தெரிவித்துள்ளார்.