துருக்கி நாட்டுக் குழந்தையின் பெயர் 'ஆம்'

குழந்தைகளுக்கு மாறுபட்ட பல பெயர்கள் வைக்கப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருப்போம். துருக்கியைச் சேர்ந்த முஸ்தஃபா செலிக் என்பவர், தனது பெண் குழந்தைக்கு “ஆம்” என்று பெயர் வைத்திருக்கிறார்.

துருக்கி மொழியில் எவட் என அந்த குழந்தைக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. எவட் என்றால் துருக்கி மொழியில் ஆம் என்பது பொருள். இதற்குப் பின்னால் ஒரு அழுத்தமான அரசியல் காரணம் இருக்கிறது. துருக்கி அதிபர் தயீப் எர்டோகனின் ஆதரவாளரான முஸ்தஃபா, வ‌ரவிருக்கும் பொது‌வாக்கெடுப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இப்படியொரு மாறுபட்ட பெயரை தனது குழந்தைக்கு

வைத்திருக்கிறார்.

அரசியல் சாசனத்தை மாற்றிமைப்பத‌ற்காக நடக்கும் இந்தப் பொதுவாக்கெடுப்பு, தயீப் எர்டோகனின் அரசியல் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் மிக முக்கியமான அம்சமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாக்கெடுப்பில் ஆம், இல்லை என்று மக்கள்‌ பதிலளிக்க வேண்டும். ஆம் என்பதற்கு அதிக வாக்குகள் கிடைத்து, அதிபர் தயீப் ‌எர்டோகன் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே, தனது குழந்தைக்கு “ஆம்” என்று பெயர் வைத்திருக்கிறார் முஸ்தஃபா.