குழந்தையால் பிரபலமான பிபிசி ‌நேரலை..!

Untitled design (6)

பிபிசி தொலைக்காட்சி நேரலையின்போது குழந்தைகள் இடையூறு செய்தது குறித்து முதல் முறையாக விளக்கம் அளித்திருக்கிறார், சியோல் பேராசிரியர் ராபர்ட் கெல்லி.

அண்மையில் ஸ்கைப் மூலமாக பிபிசிக்கு பேராசிரியர் ராபர்ட் கெல்லி பேட்டியளித்துக் கொண்டிருந்தபோது, அவரது இரு குழந்தைகளும், அவர் இருந்த அறைக் கதவைத் திறந்து கொண்டு வந்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிக வேகமாகப் பரவி பிரபலமானது. தனது மகள் தரையில் அமர்ந்து ஏதாவது புத்தகத்தைத் தேடுவார் என்று முதலில் நினைத்தாகவும், ஆனால் 30 விநாடிகளுக்கும் மேலாக அவர் நின்றுகொண்டேயிருந்ததால், தர்மசங்கடமாக உணர்ந்ததாகவும் கெல்லி குறிப்ப‌ட்டுள்ளார். அந்த நேரத்தில் வேறு காட்சிக்கு, நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் மாறிவிடுவார்கள் என நினைத்ததாகவும் கெல்லி கூறியுள்ளார். நேரலை என்பதால்‌ முகத்தை கேமராவுக்கு நேராக வைத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது குறித்தும் நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார் பேராசிரியர் கெல்லி. தனது மனைவி, குழந்தைகளுடன் தோன்றி இந்த விளக்கத்தை அவர் அளித்துள்ளார்.