ட்ரம்பைக் கண்காணிக்கவில்லை...பிரிட்டன் மறுப்பு

Trump

அமெரிக்காவின் அதிபர் தேர்தல் பரப்புரையின்போது, டொனால்ட் ட்ரம்பின் உரையாடல்களை ஒட்டுக்கேட்கவில்லை என்று பிரிட்டன் உளவுத் துறை தெரிவித்துள்ளது.

ட்ரம்பின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக, வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஸ்பைசர் கடந்த வாரம் கூறியிருந்தார். ட்ரம்ப் டவர் அடுக்குமாடிக் கட்டடத்தைக் கண்காணிப்பதற்கு பிரிட்டன் உளவுத் துறை உதவியதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இதற்குப் பதிலளிக்கும் வகையில் பிரிட்டன் உளவுத் துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. வெள்ளை மாளிகையின் குற்றச்சாட்டு முட்டாள் தனமானது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.