அருணாச்சலின் 6 ஊர் பெயர்களை மாற்றியது சீனா

China-flag

அருணாச்சல பிரதேச மாநிலத்தின் 6 ஊர்களின் பெயர்களை சீனா மாற்றியமைத்துள்ளது.

தங்கள் நாட்டு பாரம்பரியப்படி பெயர்கள் மாற்றப்பட்டுள்ளதாக சீன உள்விவகாரத் துறை தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கையில் எந்த தவறும் இல்லை என்றும் சீனா விளக்கமளித்துள்ளது. தங்களுக்கு சொந்தமான அருணாசல பிரதேசத்தை இந்தியா ஆக்கிரமித்து வைத்துள்ளதாக சீனா பல ஆண்டுகளாக குற்றஞ்சாட்டி வருகிறது. அருணாச்சல பிரதேசத்தை தெற்கு திபெத் என்றும் சீனா அழைத்து வருகிறது. தலாய்லாமாவின் அருணாச்சல் பயணம் சீனாவுக்கு ஆத்திரமூட்டியிருந்த நிலையில் இந்த பெயர் மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.