செய்திகள் உண்மை உடனுக்குடன்

பாரீசில் பயங்கரவாத தாக்குதல்: போலீஸ் அதிகாரி பலி

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் காவல்துறை அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரி‌ழந்தார். இருவர் படுகாயமடைந்தனர்.

ஃபிராங்க்ளின் ரூஸ்வெல்ட் சுரங்கப்பாதை ரயில் நிலையம் அருகே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரிகளை குறிவைத்து நேற்று மாலை ஒரு பயங்கரவாதி துப்பாக்கியால் சுட்டார். காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு அந்தப் பகுதிக்கு சீல் ‌வைத்தனர். பின்னர் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதியை போலீசார் சுட்டுக்கொன்றனர். இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. தாக்குதலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கண்டன‌ம் தெரிவித்துள்ளன.